தற்போதுள்ள காலகட்டத்தில் கலப்படம் இல்லாத அசைவ உணவு என்றால் மீன்கள் தான். பெரும்பாலான மீன்களில் வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஒமேகா - 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது
இதுபோன்று ஒவ்வொரு மீன்களுக்கும் பலவித ஊட்டத்துக்கள் உள்ளது. இதில் காரா மீன் என்ற காரல் மீனில் உள்ள மருத்து குணங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்
காரல் மீன் என்று பார்த்தால் முதலில் தாய்மார்கள் தான் ஞாபகம் வருவார்கள், கடல் பாசிகளை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும் இந்த மீனில் இருந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பால் அதிகமாக சுரக்க இந்த மீனின் உட்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
பெரிய அளவில் உள்ள காரை மீனில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும். இதனால் பெரிய காரல் மீன்களை வாங்கி உண்ண வேண்டாம் சிறிய அளவில் உள்ள காரல் மீன்களை பார்த்து வாங்கவும்
காரல் மீன்களில் ராமகாரல் என்ற குதிப்பு காரல், ஓலக்காரல், சுருப்பு காரல், கலிகாரல், கோட்டு காரல், சுதும்பு காரல் என்ற 7-வகைகளில் உள்ளது. இதில் ராமகாரலில் தான் தாய்ப்பால் சுரக்கும் அதிக சத்துக்கள் உள்ளது
வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் உள்ளன. புரோட்டின் மற்றும் நியூட்ரியன்கள் நிறைந்துள்ளதால் இதயநோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது
நோய் எதிர்ப்பு திறனை வலுப்படுத்தவும் மூளௌ வளர்ச்சிக்கும் சிறந்த உணவாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதில் ரசம், சொதி, கொலம்பு, அவியல், பொறித்து சாப்பிடுவதுதான் வழக்கம்
காரல் கருவாடுகளிலும் இதுபோன்று உணவுகளை வைத்து உண்கின்றனர். குறைந்த விலையில் அதிக மருத்துவகுணம் வாய்ந்த மீனாக இந்த காரல் மீன் உள்ளது
முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரியமான 6 ஆரோக்கிய நன்மைகள்.!