ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மருமகளாகப்போகும் ராதிகா மெர்ச்சன்ட் குறித்து பார்க்கலாம்.
என்கோர் ஹெல்த்கேர் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் வீரேன் மெர்ச்சன்ட்டின் இரண்டாவது மகள் இவர்.
1994 டிசம்பர் 18 ஆம் தேதி மும்பையில் வீரேன் மெர்ச்சன்ட் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதிக்கு மகளாக பிறந்தார்.
மும்பையின் ஜான் கோனான் பள்ளியில் படித்த ராதிகா, பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் படிப்பை முடித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் நிறுவனமான இஸ்ப்ராவாவில் சிறிது காலம் ராதிகா மெர்ச்சன்ட் பணியாற்றினார்.
8 வயதில் இருந்தே நடனம் பயின்ற இவர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆவார்.
இவரின் மூத்த சகோதரி அஞ்சலி மெர்ச்சென்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
தற்போது குடும்ப நிறுவனமான என்கோர் ஹெல்த்கேரின் நிர்வாகிகள் குழுமத்தில் ராதிகாவும் இடம்பெற்றுள்ளார்.
திருமணத்திற்கு முன்பான கொண்டாட்டங்கள், குஜராத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.