மதுரையில் களைகட்டிய மெகா கண்காட்சி.. இங்க என்னவெல்லாம் இருக்கு.?

தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாடு மையத்தில் மதுரை மெகா கண்காட்சி என்ற தலைப்பில் வீட்டு உபயோக பொருட்கள் பர்னிச்சர் போன்ற 40க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டுள்ளது

இங்குள்ள ஸ்டால்களில் சோபா, பீரோ டைனிங் டேபிள், கட்டில், மெத்தை விதவிதமான ஃபர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் கொண்ட ஸ்டால் போடப்பட்டுள்ளது

இதுமட்டுமின்றி குழந்தைகள் விரும்பக்கூடிய வகையில் பொம்மைகள் வீட்டு அழகுப் பொருட்கள், பெருமாள், பிள்ளையார், யானை போன்ற பித்தளையால் செய்யப்பட்ட பூஜை பொருட்கள்,

பத்திரிக்கைகள், திருமண பை, திருமணம் மாலை போன்ற திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பல்வேறு வகையான ஸ்டால்கள் போடப்பட்டிருந்தது

இதுமட்டுமின்றி பொது மக்களை கவரக்கூடிய வகையில் சினிமா பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறியது

மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த மெகா கண்காட்சியை மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்வையிட்டும், பொருட்களை வாங்கியும் சென்றனர்

குப்பை கொட்டும் இடத்தை சோலைவனமாக மாற்றிய கோவை பெண்.!