புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 34-வது மலர், காய், கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது
விழாவில் வேளாண்மை, தோட்டக்கலை, அதனை சார்ந்த நிறுவனங்கள், தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு முறைகள், எந்திரங்கள், புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்களை அரங்குகளாக அமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்கள், காய்கறிகள், செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
வேளாண் விழாவின் ஒரு பகுதியாக கொய்மலர்கள், தொட்டி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறிகள், பழ வகைகள், தென்னை, மூலிகை செடிகள், பழ தோட்டங்கள், காய்கறி சாகுபடி வயல்கள், அலங்கார தோட்டம், மாடித் தோட்டம்,
வீட்டு காய்கறி தோட்டம், ரங்கோலி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது
மானிய விலையில்உயர் ரக நடவுக்கன்றுகள், தனியார் நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள், உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன
இவ்விழாவில் பொதுமக்களுக்காக மலர்ப்படுக்கை மற்றும் புல்வளாகத்தில் மலர்களின் அணிவகுப்பு, பாரத மாதா சிலை, இசை நடன நீரூற்று, சிறுவர் உல்லாச ரயில் ஆகியவை இடம் பெற்றுள்ளது
மேலும் பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலை உபகரணங்கள், பழம் மற்றும் காய்கறி நாற்றுகள், உரங்கள் ஆகியவற்றின் விற்பனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது