ரூ. 225 கோடி பட்ஜெட்...

ஆனால் இந்தியன் 2 மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ‘இந்தியன் 2’ 2024 ஆம் ஆண்டின் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்

கடந்த மாதம் ஜூலை 12ஆம் தேதி வெளியான இப்படத்தில் 103 வயது முதியவராக 69 வயதான கமல்ஹாசன் நடித்திருந்தார்

இந்த படத்தில் கமலுக்கு அதிரடி சண்டை காட்சிகள் இருந்தாலும், கதை ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது

1996ல் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ‘இந்தியன்’ முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது

இந்தியன் 2 படத்திற்காக தயாரிப்பாளர்கள் பலகோடி ரூபாயை செலவழித்துள்ளனர். ஆனால், செலவிட்ட தொகை கூட திரும்ப கிடைக்கவில்லை

IMDb அறிக்கையின்படி, ‘இந்தியன் 2’ படத்துக்கு ரூ.225 கோடி செலவிடப்பட்டுள்ளது. திரைக்கதை சரியாக அமையாத காரணத்தால் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை

இந்த திரைப்படம் இந்தியாவில் 80.1 கோடி ரூபாய் மட்டுமே வியாபாரம் செய்தது. இந்தி உட்பட அனைத்து தென் மொழிகளின் தொகுப்பும் இதில் அடங்கும்

அதேசமயம், உலக அளவில் வசூல் என்று சொன்னால், ‘இந்தியன் 2’ படத்தின் மொத்த வசூல் ரூ.150.05 கோடி

இதன் மூலம் ரூ.225 கோடியில் தயாரிக்கப்பட்ட ‘இந்தியன் 2’ பாக்ஸ் ஆபிஸில் சரியான கலெக்சனை பெறவில்லை

‘இந்தியன் 2’ நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 9 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. தற்போது இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது

‘இந்தியன் 2’ ஹிந்தியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

next

அரிய வகை நோய் பாதிப்பு : ஒப்பனாக பேசிய 5 தென்னிந்திய சினிமா பிரபலங்கள்.!