2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில், அதில் கவனிக்கத்தக்கக் கூடிய ஒன்றாக உள்ளது தான் முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டது
சிறு தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசின் திட்டமான முத்ரா திட்டத்தின் கீழ் எந்த ஒரு பிணையமும் இல்லாமல் தொழில் முனைவோர்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது
அதிகபட்சமாக இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு அதிகபட்சமாக 20 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிறு, குறு தொழில்களுக்கு பிணை இல்லாமல் கடன் உதவி வழங்குவதற்காக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்ரா யோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தது
தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை விலை புள்ளி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும் பட்சத்தில் பிணையம் இல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்படுகிறது
சிசு, கிஷோர், தருண் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்களுக்கு கடன்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்குகின்றன
சிஷு பிரிவின்கீழ் ரூ.50,000 வரையிலும், கிஷோர் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் பிரிவின் கீழ்ரூ.10 லட்சம் வரையிலும் கடனாக வழங்கப்பட்டு வந்தது
2024 -25 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முத்ராதிட்டத்துக்கான கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்து உள்ளார்
இதுவரையில் முத்ரா திட்டத்துக்கான கடன் வரம்பு தருண்பிரிவின் கீழ் ரூ.10 லட்சமாகஇருந்தது. இந்நிலையில், தற்போது ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
ஏற்கெனவே முத்ராதிட்டத்தின் கீழ் கடன் வாங்கிஅதை முறையாக திருப்பிசெலுத்தியவர்களுக்கு இந்தஅறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக தொழில் முனைவோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
நாமக்கல்லில் இப்படி ஒரு இடமா… சொர்க்கத்திற்கு மறு பெயரான சித்தர் மலைக்கு போங்க.!