கவிதை மற்றும் அரசியல் பற்றிய பல்வேறு தமிழ் நூல்களின் மேல் அமர்ந்திருக்கும் பேனா சிற்பத்துடன் கூடிய தேர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரின் மெழுகு உருவம்,
அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் விளக்கப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன
பயணங்கள் நிறைந்து இந்த பேனா தேர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேனா தேரை பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர்
கருணாநிதியின் கலைத்திறனையும், பன்முகத்தன்மையையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதே தேரின் நோக்கமாகும்
இதனை வரவேற்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு கலை விழாவில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி கண்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி
மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடி பொதுமக்களை உற்சாகப்படுத்தியும், முதலமைச்சரின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பாடல்கள் பாடியும் முத்தமிழ் தேரினை வரவேற்றனர்.
மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதனை பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்து, முத்தமிழ் பேனா தேரினையும் ஆர்வமாக பார்த்து சென்றனர்
நடனமாடிய பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாக பேனா வழங்கப்பட்டது.