இரத்த புற்றுநோய் என்பது ஒரு புற்றுநோய் கிடையாது. சாதாரணமாக தொடுவதன் மூலமோ அல்லது காற்றின் மூலமோ ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு இது பரவாது. பொதுவாக இரத்த புற்று நோயானது எலும்பு மஜ்ஜைகளிலோ அல்லது இரத்த செல்களிலும் ஏற்படும் மரபணு மாற்றங்களினால் ஏற்படுகிறது. பலரும் இரத்த புற்றுநோய் பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோய் என்று கருதுகின்றனர் ஆனால் அது உண்மை அல்ல.
இரத்த புற்று நோயானது பொதுவாக வயதானவர்களுக்கு அதிகம் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இரத்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அக்யூட் லிம்போப்லஸ்டிக் லுக்கிமியா என்பது குழந்தைகளிடம் பரவலாகவும், குரோனிக் லிம்போசைட்டிக் லுக்குமியா என்பது வயதானவர்களிடம் அதிகமாகவும் காணப்படுகிறது.
இரத்த புற்றுநோய் ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும். சிலருக்கு உடல் சோர்வு, காரணம் இன்றி உடல் எடை குறைதல், இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்வை, அடிக்கடி உண்டாகும் நோய்த்தொற்று போன்றவை இரத்த புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் ஆகும். அதே நேரத்தில் இவை அனைத்துமே இரத்த புற்றுநோய் அல்லாமல் உடலில் ஏற்படும் வேறு சில உபாதைகளுக்கான அறிகுறிகள் ஆகவும் இருக்கலாம். எனவே மருத்துவரை ஆலோசனை செய்து அதன் பிறகு முடிவுக்கு வருவது நல்லது.
இரத்தப் புற்றுநோய் ஒருவருக்கு ஏற்பட்டால் கண்டிப்பாக அவரின் உயிருக்கு ஆபத்து என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயங்களில் தற்போது வளர்ந்துள்ள அதிநவீன மருத்துவ வசதிகளையும் சிகிச்சை முறைகளையும் கொண்டு இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டிப்பாக காப்பாற்ற முடியும். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நோயாளிகளும் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதோடு சிலருக்கு இரத்தப் புற்றுநோயானது முழுவதும் குணமாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு ஆரம்ப கட்டத்திலேயே இரத்த புற்றுநோயை கண்டறிவதும், சரியான சிகிச்சை எடுப்பதும் இரத்த புற்றுநோயை விரைவில் குணப்படுத்தும் உதவும்.
பல்வேறு விதமான இரத்த புற்றுநோய்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான புற்றுநோயும் ஒவ்வொரு விதத்தில் நோயாளியை பாதிக்கும். பொதுவாக லுக்கிமியா எனப்படுவது இரத்தத்தையும் எலும்பு மஜ்ஜைகளையும் வெகுவாக பாதிக்கிறது. லிம்போமா என்பது ஒருவரின் நிணநீர் மண்டலத்தை பாதிக்கிறது. மயிலோமா என்பது நோயாளியின் எலும்பு மஜ்ஜைகளில் உள்ள பிளாஸ்மா செல்களை வெகுவாக தாக்குகிறது. எனவே என்ன விதமான இரத்தப்புற்று நோய் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற சிறப்பான சிகிச்சைகளை அளித்தால் மட்டுமே நோயாளியை காப்பாற்ற இயலும்
பலரும் குறிப்பிட்ட பழக்கவழக்கங்களையும் வாழ்க்கை முறையினையும் பின்பற்றுவதால் இரத்த புற்றுநோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும் என நம்புகிறார்கள். ஆனால் உண்மையிலேயே தற்போது வரை இரத்த புற்றுநோயை வரும் முன்னரே காத்துக் கொள்வதற்கு எந்த ஒரு வழியும் கண்டறியப்படவில்லை. இரத்தப் புற்றுநோய் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாவதால் அதனை நம்மால் எளிதில் தடுக்க இயலாது. அதே சமயத்தில் சில குறிப்பிட்ட வகை வேதிப்பொருட்கள் அல்லது கதிரியக்கங்களுக்கு அதிக அளவு உட்படும் போது அவை இரத்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. எனவே இதுபோன்றவற்றிலிருந்து விலகி இருப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை நம்மால் குறைக்க முடியும்.
இரத்த தானம் செய்வதால் இரத்த புற்றுநோய் ஏற்படும் என்று பலரும் நம்புகின்றனர். உண்மையில் இரத்த தானம் செய்வது என்பது மிகவும் ஆரோக்கியமான செயலாகும். இதனால் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடிவதுடன் இரத்த தானம் செய்பவரின் உடலிலும் பல்வேறு விதமான நன்மைகள்