நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன
இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது
இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது
கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன. பல நேரங்களில் முட்டை விலை உயர்வும், சரிவும் தொடர்ந்து வந்தன
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது
நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், ரூ. 5.80 ஆக இருந்த முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.85 ஆக நிர்ணயிக்கப்பட்டது
50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் ஒரு முட்டையின் விலை தற்போதுதான் அதிகபட்சமாக ரூ. 5.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்கு அதிக அளவில் முட்டை தேவை ஏற்பட்டுள்ளதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது