கொடைக்கானல் லேக்கை போன்று மதுரையில் ஒரு நடைபயிற்சி இடமா.?

Scribbled Underline

மதுரையில் சுந்தரம் பார்க்கிற்கு அடுத்தபடியாக நடைபயிற்சிக்கு என்று ஒரு பூங்கா உள்ளது என்றால் அது மதுரை நத்தம் மேம்பாலம் அடிப்பகுதியில் இருக்கக்கூடிய நாராயணம் குளம் கண்மாய் பூங்கா

இந்த மேம்பாலம் கட்டும்பொழுது இப்பகுதியில் நடைபயிற்சிக்கு என்று பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது

இதனை அடுத்து தற்போது கண்மாயை சுற்றி நடை பயிற்சி மேற்கொள்வதற்காக நடை பாதைகள் அமைக்கப்பட்டு, குழந்தைகள் விளையாடுவதற்கான சர்க்கஸ் ஊஞ்சல் என பலவிதமான விளையாட்டு தளங்களும் உள்ளது

காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது கொடைக்கானலில் உள்ள லேக்கை சுற்றி வருவது போன்று இயற்கை மற்றும் அமைதியான சூழ்நிலையில் காட்சியளிப்பதாக நடை பயிற்சியாளர்கள், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் தெரிவித்தனர்

குறிப்பாக இந்த பூங்காவிற்கு அப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் குழந்தைகளுடன் வந்து விளையாடிவிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்

இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது தெரியுமா.?

– ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் - டாக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை

உலகின் உயரமான மனிதர் இவர் தான்! ஏன் இந்த அசுர வளர்ச்சி?

More Stories.

மேலும் இங்குள்ள கல் மேடைகளில் முதியவர்கள் அமர்ந்து தங்களது பொழுதை கழிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது

எனவே மதுரை மக்களே நீங்களும் இயற்கையான சூழ்நிலையில் நடை பயிற்சி மேற்கொள்ளவோ அல்லது குழந்தைகளுடன் சேர்ந்து விளையாண்டு மகிழ வேண்டும் என்றால் நீங்களும் இந்த பகுதிக்கு சென்று வாருங்கள்