கொலு இப்படி தான் வைக்க வேண்டும்.!

விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள சிவ விஷ்ணு ஆலயத்தில் கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலு பொம்மை வழிபாட்டில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் இடம் பெற்றிருந்தன

தமிழகத்தில் முப்பெரும் தேவியரை வணங்கும் வகையில், ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்து மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது

நவராத்திரி விழாவையொட்டி, கோயில்கள், வீடுகள், நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதுபோல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கோயில்களிலும், நவராத்திரி ஒட்டி, கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்

ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி என்பது போல சக்திக்கு உகந்த நாள் நவராத்திரியாகும்

இந்த நவராத்திரி பண்டிகையில் ஒன்பது நாள் வழிபடுவார்கள். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவார்கள்

Stories

More

மதுரையின் டாப் 3 டூரிஸ்ட் ஸ்பாட் இதோ..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த அவலநிலையா..!

12 ஜோதிர் லிங்கங்களும் ஒரே இடத்தில்..!

அதாவது திருமணம் நடக்க வேண்டும் என்பவர்கள் திருமண செட் கொலு பொம்மை, வளைகாப்பு நடக்க விரும்புபவர்கள் வளைகாப்பு கொலு பொம்மை செட்டு போன்ற வேண்டுதல்கள் ஏற்றார் போல கொலு பொம்மை வைத்து வழிபடுவார்கள்

அந்த வகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள சிவ விஷ்ணு ஆலயத்தில் கொலு பொம்மை வைத்து வழிபாடு நடத்தினார்கள்.இந்த கொலு பொம்மை கண்காட்சியை பக்தர்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்

மேலும் இந்த கொலு பொம்மையில் வழிபாட்டில் திருமண செட்டு, வளைகாப்பு செட்டு, கிரிக்கெட் செட்டு போன்ற பல கொலு பொம்மைகள் இடம் பெற்றிருந்தன

புதுக்கோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் இத்தனை சிறப்புகளா.?