அந்த படத்தில் நடித்தது தான் வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு - நயன்தாரா 

10 ஆண்டுகளுக்கும் மேல் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தி முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா

'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நயன்தாராவுக்கு முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தது

முதல் படம் கொடுத்த வெற்றியில் அடுத்த படத்திலேயே ரஜினியுடன் 'சந்திரமுகி' படத்தில் ஜோடி போட்டார்

அடுத்தடுத்த படங்களில் தனது அசத்தலான நடிப்பு, கவர்ச்சி என ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை பிடிக்க தொடங்கினார்

அதை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடிப்பில் உருவான 'கஜினி' படத்தில் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்தார்

இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது மற்றும் படத்தில் நயத்தாராவின் கவர்ச்சி நடனம் பலரையும் இவர் பக்கம் ஈர்த்தது

கஜினி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக கமிட்டான நடிகை நயன்தாரா விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்

தற்போது உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா

இந்த நிலையில், கஜினி படத்தில் நடித்தது குறித்து நயன்தாரா பேசிய விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது

நயன்தாரா கூறுகையில், கஜினி படத்தில் நடித்தது தான் எனது வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு

கதாபாத்திரம் குறித்து என்னிடம் சொல்லப்பட்டது போல அவர்கள் காட்சிப்டுத்தவில்லை. சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன்

இதைப்பற்றி நான் புகார் கூற விரும்பவில்லை, இதை நான் என் வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

next

தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட 10 சிறந்த தமிழ் படங்கள்.!