இந்த ஒரு கரைசல் போதும் செடிகளிலிருந்து பூச்சிகளை விரட்டி விடலாம்.!

விவசாயிகள் பயிர் செய்யும் பிரதான பயிர்களில் ஒன்று நெற்பயிர்கள். இந்தச் செடிகளில் பூச்சி தாக்குதல் இல்லாமல் நல்ல வளர்ச்சி அடைவதற்கு, வேப்ப எண்ணெய் கரைசல் மிகவும் பயனுள்ளதாக அமையும்

எனவே விவசாயிகள் குறைந்த செலவில் இது போன்ற கரைசலை பயன்படுத்தலாம் என விளக்கமளிக்கிறார் இயற்கை விவசாயி பாண்டியன். பண்டைக் காலத்திலிருந்து வேப்பெண்ணெய் சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது

அதுபோல, பயிர் சாகுபடியில் ரசாயன மருந்துகள் அதிகம் உபயோகிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது. எனவே ரசாயன மருந்துகளை குறைத்து இயற்கையில் கிடைக்கும் பொருட்களை உபயோகித்து விவசாயிகள் பயன் பெறலாம்

அவ்வாறு இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் பிரதானமானது வேம்பு. வேம்பின் கசப்பும், மணமும் எதிரியினங்களை சாப்பிட விடாமலும் பயிரை அண்டவிடாமலும் விரட்டுகின்றன. பயிர்களை தாக்கும் பூச்சியினங்களை விரட்டுவதற்கு வேப்ப எண்ணெய் கரைசல் மிகவும் பயன்படுத்தப்படுகிறது

வேப்ப எண்ணெய் கரைசல் தயாரிப்பதற்கு காதி சோப்பு, வேப்ப எண்ணெய் 2 பொருளே போதும்

முதலில் காதிசோப்பை சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். காதி சோப்பு துருவலை சிறிது தண்ணீரை ஊற்றி ஊற வைத்த பிறகு,கொஞ்சம் கொஞ்சமாக வேப்ப எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து தயிர் பதம் வரும் வரைக்கும் கரைசலை நன்றாக மிக்ஸிங் செய்ய வேண்டும்

அதனை தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்து பிறகு இரண்டு முறை வடிகட்டுதல் மிகவும் அவசியமாகும்.இப்படி செய்தால், இயற்கை முறையில் சிறந்த வேப்ப எண்ணெய் கரைசல்( பூச்சி விரட்டி ) தயாராகிவிட்டது

ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு ஒரு காதி சோப்பில் பாதி அளவு (200கி) காதி சோப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு லிட்டர் வேப்ப எண்ணெய், 10லி தண்ணீர் போதுமானதாகும்

Stories

More

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரபகவான் கோவில்.!

திருவள்ளுவரைப் போற்றும் பிரான்ஸ் அரசு..!

மதுரையில இப்படி ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டா..?

ஒரு டேங்கிற்கு வேப்ப எண்ணெய் கலவை 150மி போதுமானதாகும். 1 ஏக்கருக்கு 10 டேக் வரைக்கும் இந்த கரைசலை நெற்பயர்கள் மீது தெளிக்கலாம்

இந்த வேப்ப எண்ணெய் கரைசலை அனைத்து வகையான செடிகளுக்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த பருவத்தில் நெற்பயிரிகளில் சாறு உறிஞ்சு பூச்சி, குருத்து பூச்சி, கம்பளிப்பூச்சி தாக்குதல் போன்ற அதிக பூச்சி தாக்குதல் ஏற்படும்

இதனைக் குறைப்பதற்காக இந்த வேப்ப எண்ணெய் கரிசலை பயன்படுத்தினால், எந்த ஒரு பூச்சி தாக்குதலும் நெற்பயிர்களில் இருக்காது

குறைந்தபட்சம் விவசாயிகள் 400 ரூபாய் செலவு செய்தால் போதும், பூச்சி தாக்குதல் இல்லாத பயிர்களை சாகுபடி செய்து நல்ல மகசூலை ஈட்டி, லாபம் பார்க்கலாம் எனவும் அனைத்து விவசாயிகளும் இதனை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் எனவும் என இயற்கை விவசாயி பாண்டியன் கூறினார்

ஏர்கலப்பை உடன் காணப்படும் துர்க்கை அம்மன் கண்டெடுப்பு.!