பப்பாளி விதைகளை சாப்பிடக்கூடாதா..? எச்சரிக்கும் மருத்துவரின் பதிவு..!

மூத்த மருத்துவ ஆலோசகரான டாக்டர் Cyriac Abby Philips, தனது ட்விட்டர் (தற்போது எக்ஸ்) பேஜில், பப்பாளி விதைகளை சாப்பிடுவது தேவையற்ற டாக்ஸிக் விளைவுகளை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும்

ஆண்கள் பப்பாளி விதைகளை சாப்பிடுவது அவர்களின் விந்தணுக்களுக்கு சேதம் விளைவிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன என்கிறார் டாக்டர் பிலிப்ஸ். பப்பாளி விதைகளை சாப்பிடுவதால் ஆண்கள் தங்களது இயல்பான விந்தணு அளவை இழப்பதோடு அவர்களது விந்தணுக்களை சேதப்படுத்தப்படுகிறது.

கல்லீரல் பாதிப்பு

விலங்குகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பப்பாளி விதையானது கல்லீரல் செல்களை சேதப்படுத்தியது, டிஎன்ஏவை அழித்து, நாள்பட்ட கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தியது. இறுதியில் இது cirrhosis நிலை ஏற்படுத்தியது என்று விளக்கி இருக்கிறார் மருத்துவர் பிலிப்ஸ்.

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க உதவாது

பப்பாளி விதைகளை சாப்பிடுவது தேவையற்ற நேரத்தில் கரு உருவாவதை தடுக்க கூடிய ஒரு கருத்தடையாக செயல்படும் என்பது கட்டுக்கதை, எனவே குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் பப்பாளி விதைகளை பெண்கள் சாப்பிட வேண்டாம் என்கிறார் மருத்துவர்.

மாதவிடாய் சுழற்சி சீர்குலையும்

பப்பாளி விதைகள் மற்றும் பப்பாளி பழங்கள் menstrual periods-ஐ தூண்டுவதில்லை மற்றும் இவை பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட கருத்தடை முறையும் இல்லை.

எனவே பப்பாளி விதைகளை சாப்பிட கூறும் வைரல் வீடியோக்களை நம்ப வேண்டாம். பழுத்த பப்பாளி பழங்களை சாப்பிடுவதால் நான்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பப்பாளி விதைகளை எந்த வடிவத்திலும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?