வார இறுதியில் மட்டுமே மது குடிப்பவரா நீங்கள்..? எச்சரிக்கும் ஆய்வு..!

மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களில் சிலர் வாரநாட்களில் பாட்டிலை தொடவே மாட்டார்கள். ஆனால் வார இறுதி என்று வந்து விட்டால் மது பாட்டிலை கீழே வைக்கவே மாட்டார்கள்

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தித்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். 30 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடையே காணப்படும் வார இறுதி மதுபழக்கம் பற்றிய போக்கு இந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் கூட வார  இறுதியில் மட்டும் கூடுதலாக குடிக்கும் பழக்கம் தீமைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அளவுக்கதிகமாக குடிப்பதால்...

உடல் ரீதியிலான பாதிப்பு மட்டுமின்றி, மன உளைச்சல், Alcohol tolerance அதிகரிப்பது, அலுவலகம் அல்லது நிறுவனங்களில் பொறுப்புகளை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது என பல பாதிப்புகள் ஏற்படும்.

1

இதற்கு உதாரணம் பார்க்கலாம்

ஒருவர் ஒரு சனிக்கிழமை இரவில் 7 ட்ரிங்க்ஸ் குடிக்கிறார் என்று வைத்து கொள்வோம். தினசரி 1 ட்ரிங்கை இரவு உணவோடு சேர்த்து குடிக்கும் ஒருவருடன் சனிக்கிழமை மட்டும் குடிக்கும் நபரை ஒப்பிட்டால், இருவரும் ஒரு வாரம் குடிக்கும் அளவு ஒரே மாதிரி இருந்தாலும் கூட, வார இறுதியில் 7 ட்ரிங்க்ஸ் குடிக்கும் நபருக்கு அதிக ஆபத்து உள்ளது

2

பெண்களுக்கு அதிக ஆபத்து

மது அருந்துவதால் தொடர்பான மூளை பாதிப்பு, இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான அதிக ஆபத்து உள்ளிட்டவற்றுக்கு பெண்கள் மிக எளிதாக பாதிக்கப்படுகின்றனர்.

3

எனவே மது அருந்துவதை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

4

கொழுப்பு கல்லீரல் தடுக்கும் 5 ஆரோக்கிய பானங்கள்.!