திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு ஸ்டீம் பார்க் உள்ளது. இங்கு ட்ரோன், கிரகங்கள், தொலைநோக்கிகள், கணிதம், அறிவியல் தொடர்பாக பல்வேறு மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன
குழந்தைகள் விளையாட பார்க்கும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அப்துல் கலாம் முழு உருவ சிலை உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “நம் நாட்டின் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று எத்தனையோ பேர் உள்ளனர். பெரிய அளவில் போற்றிக் கொண்டாடப்பட்ட விஞ்ஞானி என்றால் அது கலாம் மட்டுமே
அதிலும் குழந்தைகள் கொண்டாடிய, கொண்டாடுகிற, கொண்டாடும் விஞ்ஞானி என்று கலாமைத் தாராளமாகச் சொல்லலாம்
நான் நன்றாகப் படித்து பெரிய மருத்துவராவேன், கலெக்டராவேன் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்களை நான் விஞ்ஞானி ஆவேன் என்று சொல்ல வைத்தவர் கலாம்
தமிழகக் குழந்தைகள் விஞ்ஞானிகளாகவும், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாகவும் கனவு காண்பதற்குத் தடையேதுமில்லை. அந்த வகையில் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த ஸ்டீம் பார்க் பயனுள்ளதாக உள்ளது
பாடம் சார்ந்தும், பாடத்திட்டத்துக்கு வெளியேயும் நிறைய அறிவியல் கருத்துகளை உணர்ந்துகொள்ள உதவுகிற வகையில் இருக்கிறது
பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வரிசையில் அறிவியல் மையங்கள்மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை கொடுக்கின்ற வகையில் அமைகின்றன
தமிழகத்தில் அறிவியல் மையங்கள் என்று எடுத்துக்கொண்டால், சென்னையில் பிர்லா கோளரங்கத்துடன் கூடிய பெரியார் அறிவியல் மையம், கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர்உள்ளிட்டமாவட்டங்களில் அறிவியல் மையங்கள் உள்ளன” என தெரிவித்தனர்