நெல்லையின் தென் திருப்பதி கோயிலுக்கு இத்தனை சிறப்புகளா.?

திருநெல்வேலி மாவட்டம் சன்யாசி கிராமத்தில் சீனிவாச பெருமாள் வெங்கடாசலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கிராம பகுதி மக்களால் இக்கோவில் நெல்லை திருப்பதி என அழைக்கப்படுகிறது

மூலவர் சீனிவாச பெருமாள் திருப்பதியில் எவ்வாறு இருப்பாரோ அதே போன்று இந்த கோவிலில் காட்சியளிக்கிறார். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை குருவாயூரில் உள்ள குருவாயூர் அப்பர் போன்று காட்சியளிக்கிறார்

குறிப்பாக வெண்ணெய் காப்பு அலங்காரம் கிருஷ்ண ஜெயந்தி அன்றும் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை அன்றும் நடைபெறுகிறது. அதாவது 365 நாட்களில் இந்த இரண்டு நாட்கள் மட்டுமே இந்த அலங்காரத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்

இந்த கோயில் வரலாறு குறித்து அநிருத்த பட்டாச்சார் கூறுகையில், "சுமார் 400 வருடங்களுக்கு முன் சன்னியாசி ஒருவர் 32 ஆண்டுகள் தாமிரபரணியில் நதி கரையில் பெருமாளை நினைத்து தவம் இருக்கிறார்

அப்பொழுது திருப்பதியில் எவ்வாறு உள்ளாரோ அதே போல் பெருமாள் அந்த சன்னியாசிக்கு காட்சியளிக்கிறார். இது நினைவாக இக்கோயில் எழுப்பப்படுகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் முன்பெல்லாம் இந்த கோவிலுக்கு தான் வந்து பிரார்த்தனை செய்வார்கள்

குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் எந்த பிரார்த்தனையை நினைத்து வேண்டினாலும் அப்படியே நடப்பதாக நம்பப்படுகிறது

Stories

More

உதகை அருகே இப்படி ஒரு காடா?

புதுக்கோட்டையில் மிஸ் பண்ண கூடாத சூப்பர் ஸ்பாட்!

அமெரிக்காவில் உள்ள மூலிகை செடி நம்ம ஊர் குப்பையில் முளைக்கிறதா?

இக்கோவிலில் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இக்கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்" என தெரிவித்தார்

375 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் 8வது கண்டம்.!