திருநெல்வேலி மாவட்டம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பள்ளியில் படித்தவர்கள் மகாராஜா, முகமது அனஷ், வினோத் குமார். மூவரும் டிகிரி படித்து முடித்து விட்டனர் இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகாராஜா விளையாட்டு வீரர் ஆவார்
இவர் கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்
தனது சாதனை வெற்றி குறித்து அவர் கூறுகையில், “இன்னும் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதன் படி பரிசு தொகையை விரைந்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்
இதேபோல் இவரது நண்பர் முகமது அனஷ் ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் வினோத் குமார் என்பவரும் பேச்சுப்போட்டி உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்
அண்மையில் பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மூவரும் தங்களுக்கான திறமைகளை பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தியும் வெற்றி பெற்றும் வருவதால் விருதுகள் வழங்கப்பட்டன
நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆர்ஐ கோமதி பிரம்ம நாயகம் தங்களுக்கு உதவி செய்து வருவதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்” தெரிவித்தனர்