நெல்லை பேமஸ் பனை ஓலை கொழுக்கட்டை... வீட்டிலேயே செய்ய ரெசிபி இதோ.!

திருநெல்வேலி மாவட்டத்தில் பனை ஓலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. பனை மரங்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் அதை வைத்து கொழுக்கட்டை மற்றும் பாரம்பரிய பொருட்கள் செய்யப்படுகின்றன

பச்சரிசி முக்கால் கிலோ, கருப்பட்டி அரை கிலோ, ஏலக்காய், தேங்காய் ஒரு மூடி துருவியது, பனை ஓலை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சரிசியை நன்கு கழுவி ஊற வைத்து நிழலில் உலர்த்தி, மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்

பனை ஓலையின் மடிப்பான பகுதிகளை ஒரு அடி நீளத்தில் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பக்கமும் முனைகளை வெட்ட வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், மாவு சேர்த்து வறுக்கவேண்டும்

கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். அகலமான பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு, தேங்காய் துருவல், பொடித்த ஏலம், சுக்குப் பொடி, கருப்பட்டி பாகு இவற்றுடன் தண்ணீர் தெளித்து கட்டியில்லாமல் பக்குவமாக பிசைய வேண்டும்

வெட்டிய பனை ஓலையில் மடிப்பான பகுதியில் நடுவில் மாவை வைத்து ஓலையை சேர்த்து மூடவும். அதன் மேல் இன்னொரு பனை ஓலையை வைத்து இரண்டையும் சேர்த்து மாவு வெளியே தெரியாதவாறு ஓலையை நாரில் கட்டி விட வேண்டும்

இதை அப்படியே இட்லிச் சட்டியில் அடுக்கி வைத்து நன்கு வேகவிட்டு எடுத்தால் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்

Stories

More

சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லதா..?

மொறு மொறு சிறுதானிய கட்லெட்... ரெசிபி 

ஆவி பறக்க பெப்பர் இட்லி... ரெசிபி 

இதில் மருத்துவ குணம் இருப்பதாகவும் பெரியோர்கள் கூறுவார்கள்.

தினமும் ‘நெய் காபி’ உட்கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்.!