நவீன வசதிகளுடன் ட்ரோன் வடிவமைத்த நெல்லை மாணவர் ஜோயல் இன்பான்ட் ராஜ்.!

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இயங்கி வரும் ஜான்ஸ் கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயின்று முடித்தவர் மாணவர் ஜோயல் இன்பான்ட் ராஜ்

இவர் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டிய ப்ராஜெக்ட்டில் ஆய்வு செய்து கூடுதல் வசதிகள் உடைய ட்ரோன் ஒன்றை வடிவமைத்துள்ளார். 

இதுகுறித்து மாணவர் ஜோயல் இன்பான்ட் ராஜ் கூறுகையில், “ரிமோட் கண்ட்ரோல் மூலம் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கண்காணித்து அப்பகுதியில் உள்ள பொருள் அல்லது நபர் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம்

அந்த பொருள் அல்லது நபர் நகரும்போது உடன் சென்று அங்கு நடைபெறும் செயல்களை படம்பிடித்து தெளிவாக கண்டறிய முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலமாக நடைபெறு நிகழ்வுகளைவைபை வசதி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அனுப்ப முடியும்

கேமராவின் திசை தானாக மாறி தொடர்ந்து கண்காணிக்கும் வசதி உடையது. மேலும் இரவு நேர அசைவுகளையும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். அப்பகுதியில் உள்ள வெப்பநிலை மற்றும் பிற தகவல்களையும் பதிவு செய்து தரும்

குறிப்பாக காவல்துறையினருக்கும் ராணுவத்திற்கும் இந்த ட்ரோன் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்

இந்த ட்ரோனின் முதல் கட்ட பணி முடிந்துள்ளது. தேவைப்பட்டால் அடுத்த கட்டத்திற்கு இதனை கொண்டு செல்ல தயாராக உள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்வெளியில் ஒருவர் இறந்தால் என்ன நடக்கும்.?