நாகர்கோவிலில் தயாரிக்கப்படும் நேந்திரம் சிப்ஸ், சிப்ஸ் வகைகளிலேயே தனிப்பெரும் அடையாளமாய் இருக்கின்றது. நாகர்கோவிலிலும் அதை சுற்றி இருக்கும் இடங்களிலும் வாழைப்பழமே பிரதான விவசாயத்தொழிலாக இருக்கின்றது
இதன் மூலம் இயற்கையான வாழைப்பழத்தினை கொண்டு நேந்திரம் சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலை எண்ணெய் மற்றும் வாழைக்காய் கொண்டு தயாரிக்கப்படும் நேந்திரம் சிப்ஸ் மற்ற சிப்ஸ்களை காட்டிலும் அடர்த்தி அதிகமானதாகவும், மொறுமொறுப்பானதாகவும் இருக்கின்றது.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நேந்திரம் சிப்ஸ் மிகவும் சுவையாகவும் தனித்துவமாகவும் இருப்பதினால் இதற்கு வாடிக்கையாளர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் தாண்டி வேறு மாநிலங்கள் வெளிநாடுகளிலும் உள்ளனர்
பொதுவாகவே இந்த நேந்திரம் பழம் சிப்ஸ் ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஐயப்பன் கோவில் சீசன் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களால் குமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள்
இந்த நேந்திரம் பழம் சிப்சினை அதிக அளவில் வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர் மேலும் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் இந்த நேந்திரம் பழம் சிப்ஸ்சினை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்
உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தரமான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழை காய்களை காய்களை வாங்கி பின்பு அதனை நன்கு சுத்தம் செய்து அதன் தோல்களை நீக்கி விடுவோம். நீக்கப்பட்ட பழ தோல்கள் கால்நடைகளுக்கு உணவளிப்பதற்காக கொடுக்கப்படுகிறது
பின்பு அந்த காய்கள் சிப்ஸ் தயாரிப்பதற்கு என்றே பிரத்தியேகமாக செய்யப்பட்ட எந்திரத்தில் கொடுக்கப்பட்டவுடன் அவை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டப்படுகிறது அவற்றை தேங்காய் எண்ணெயில் பொறித்து சுடச்சுட சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது
பின்பு அந்த சிப்ஸின் மீது தேவையான அளவிற்கு உப்பு மற்றும் நல்ல மிளகு பொடி தூவப்படுகிறது தூவப்பட்ட உப்பு மற்றும் நல்ல மிளகு அனைத்து சிப்ஸ்களிலும் சேரும் வகையில் நன்கு கலந்து பின்பு அது விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறது