ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.550 கோடி செலவில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் நான்கு வருடங்களாக நடைபெற்று வருகிறது
பழைய ரயில் பாலம் நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை, பாம்பன் கடலுக்கு முன்பு உள்ள மண்டபம் வரையிலும் நிறுத்தப்பட்டுள்ளது
நான்கு வருடங்களாக நவீன வசதிகளுடன் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு நடுவில் கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்ப செங்குத்து பாலத்துடன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தற்போது கப்பல் கடந்து செல்லும்போது செங்குத்து பாலம் லிஃப்ட் போன்று ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீ உயரத்திற்கு மேல்நோக்கி செல்லும், இதற்காக மையப்பகுதியில் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன
இந்த தூணின் மேல் பகுதியில் செங்குத்து பாலத்தின் கர்டரினை ஏற்றவும், இறக்கவும், வீல்கள் போன்ற இழுவை இயந்திரம் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது
இந்த பணிகள் முடிந்து 700 டன் எடை உடைய செங்குத்து பாலம் பொருத்தி மற்ற பகுதிகளுக்கும் கர்டர்கள் அமைத்து விட்டால் பணிகள் முழுமை பெறும்
தற்போது, 1.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 100 சதவீதப்பணிகள் நிறைவடைந்துள்ளது
இந்தாண்டுக்குள் பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, ரயில் சேவை புதிய பாலத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய 9 தமிழ் முன்னணி நடிகர்கள்.!