கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்ப பதிவை தாங்களாக மேற்கொள்ளத் தமிழக அரசு PICME 3.0 என்னும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
இனி கர்ப்பிணிப் பெண்கள் கிராம சுகாதாரச் செவிலியரை அணுகாமல் தாங்களே தங்களது கர்ப்பப் பதிவை http://picme3.tn.gov.in என்னும் புதிய இணையதளத்தில் பதிவு செய்து RCH - ID எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்
இதில் கர்ப்பிணிகள் தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தொலைப்பேசி எண்ணிற்கு வரும் ஓடிபியை பதிவு செய்து சுய விபரங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை உள்ளீடு செய்து பிக்மி எண்ணைக் குறுந்தகவல் மூலம் பெறலாம்
மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி பெறும் கர்ப்பிணி தாய்மார்கள் தாங்களே விண்ணப்பித்துக் கொள்ளலாம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவியைப் பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் அடையாள அட்டை, ஊனமுற்றோர் தாய்மார்களின் அடையாள அட்டை,
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள தாய்மார்களின் குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பதிவேற்றம் செய்யலாம்
மேலும், குடும்ப நிகர வருமானம் 8 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்களின் வருமானச் சான்றிதழ், அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கான அடையாள அட்டை, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை அடையாள அட்டை,
இலங்கை அகதிகள் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசால் சமுதாயத்தில் பின்தங்கிய தாய்மார்களுக்கு வழங்கப்படும் அட்டை ஆகிய அடையாள ஆவணங்களிலும் ஏதேனும் ஒன்றைப் பதிவேற்றம் செய்து பெற்றுக் கொள்ளலாம்
மத்திய, மாநில அரசில் நிரந்தரப் பணியாளர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியைப் பெற இயலாது
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி 3 தவணைகளாகவும், ஊட்டச்சத்து பெட்டகம் 2 தவணைகளாகவும் வழங்கப்படும்
மேலும், புலம் பெயர்ந்த தாய்மார்களும், உயர் பிறப்பு பிரிவின் தாய்மார்களும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும், 2ஆம் தவணையும் மட்டுமே பெறத் தகுதி உடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
உங்கள் கண் பார்வையை மேம்படுத்த எளிய மற்றும் பயனுள்ள 10 பராமரிப்பு குறிப்புகள்.!