விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழில், அச்சு தொழில், தீப்பெட்டி தொழில் என மூன்று முக்கிய தொழில்கள் நடைபெற்று வருவதால் தொழில் வளம் மிக்க ஊராக திகழ்ந்து வருகிறது
தொழில் வளமிக்க ஊராக இருந்தாலும் பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் சிவகாசியில் குறைவாகவே இதுவரை இருந்து வந்துள்ளன
தற்போது சிவகாசியில் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டு உள்ளது
உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்த பெருநகரங்களில் அந்தந்த ஊர் பெயர்களில் ஊரை பெருமைப்படுத்தும் விதமாக செல்பி பாயிண்ட் வைக்கும் வழக்கம் உருவாகி வருகிறது
அந்த வகையில் விருதுநகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐ லவ் விருதுநகர் என்ற செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டது
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே தற்போது விருதுநகரை தொடர்ந்து சிவகாசியிலும் செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டு உள்ளது.
சிவகாசி பன்னீர் தெப்பத்தில் வைக்கப்பட்டு உள்ள செல்ஃபி பாயிண்டை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து பார்த்து புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர்
பன்னீர் தெப்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பராமரிப்பு இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது புணரமைக்கப்பட்டு உள்ளது. பன்னீர் தெப்பதை மேலும் அழகாக்க செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டு உள்ளது
சிவகாசியில் உள்ள செல்ஃபி பாயிண்ட் வழக்கமான செல்ஃபி பாயிண்ட்களை போல அல்லாமல் சற்று வித்தியாசமாக சிவகாசி தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு உள்ளது
சிவகாசி செல்ஃபி பாயிண்ட் பின்புலத்தில் பட்டாசு தொழில் செய்யும் பெண், அச்சு வேலை செய்பவர், தீப்பெட்டி குச்சி அடுக்கும் பெண் ஆகியோர் இடம்பெற்றுள்ளன