கம்மி விலையில் ஸ்வெட்டர் வேணுமா.? விழுப்புரம் இந்த பகுதிக்கு போங்க..!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆண்டுதோறும் வடமாநில வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு, ஸ்வெட்டர்கள் விற்பனை செய்து வருவது வழக்கம்

அந்த வகையில், விழுப்புரத்தில் உள்ள சாலையோர கடைகளில் ஸ்வெட்டர் விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதால் வடமாநிலத்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நேபாள் பகுதியை சேர்ந்த வடமாநிலத்வர்கள் விழுப்புரம் காந்திசிலை அருகே சாலையோரத்தில் தற்காலிக கடைகளை அமைத்து நேபாள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஸ்வெட்டர், குல்லாய் மற்றும் குழந்தைகளுக்கான உல்லன் ஆடைகள் விற்பனை செய்கின்றனர்

சிறியவர்களுக்கான ஸ்வெட்டர் 100 ரூபாய்முதல் 200 ரூபாய் வரையும் பல்வேறு ரகங்களில் விற்பனைசெய்யப்படுகிறது

பெரியவர்களுக்கான ஸ்வெட்டர்200 ரூபாய் துவங்கி 750 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேரடி விற்பனை செய்து வரும் இவர்களிடம் விழுப்புரம் பகுதி மக்கள் ஆர்வத்துடன் ஸ்வெட்டர் வாங்கி செல்கின்றனர்

Stories

More

மூன்றாவது முறையாக செந்நிறமாக மாறிய புதுவை கடல்..

முத்தத்தில் உருவான கமல் ஓவியம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல இதுதான் நல்ல டைம்..

வருடம்தோறும் விழுப்புரம் மாவட்டத்திற்கு தான் விற்பனைக்காக வருவோம் என்றும், இந்த வருடமும் வழக்கம் போல் வந்துள்ளதாகவும்வடமாநில வியாபாரி தெரிவித்தார்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்றார் போன்று ஸ்வெட்டர்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் நல்ல லாபம் கிடைத்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்

சில்லென்ற சூழலுக்கு மாறிய விழுப்புரம்… போடோட்ஸ்.!