மதுரையில் ஃபேமஸாகும் ஹைதராபாத் பிரியாணி... எங்கு கிடைக்கும் தெரியுமா.?

மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு பகுதியில் குண்டு பாய் ஹைதராபாத் பிரியாணி கடையில தான் கமகமன்னு பக்காவான ஹைதராபாத் பிரியாணிய குடுத்துட்டு இருக்காங்க

பொதுவாகவே ஹைதராபாத் பிரியாணி அப்படின்னா சீரக சம்பா அரிசியில பொறித்த வெங்காயத்தை பரபரன்னு தூவி அது மேல கிஸ்மிஸ் முந்திரி, நெய் எல்லாம் ஊத்தி சாப்பிட்டா அதுதான் ஹைதராபாத் பிரியாணி அப்படின்னு சொல்லுவாங்க

அந்த மாதிரியான பிரியாணியை நம்ம மதுரையிலையும் கொடுக்கணும் அப்படின்னு ஒரு சாதாரண தள்ளு வண்டியில காலைல 10 மணியிலிருந்து ஒரு பெரிய டபரால பிரியாணியை செய்ய ஸ்டார்ட் பண்றாரு

கரியெல்லாம் வெட்டி மசாலா தடவி அரிசியல வேகவைத்து தம் போட்டு மூடி வச்சு பார்த்தா இந்த பிரியாணிய வாங்கி சாப்பிடணும் தோணும்

இந்த பிரியாணிய வரிசையா பணத்தை கொடுத்து டோக்கன் போட்டு வச்சுக்கிறாங்க அந்த அளவுக்கு இந்த பிரியாணியோட டேஸ்ட் மக்கள சுண்டி இழுத்துட்டு வருது

ஒரு மணி அளவில் இந்த கடைய சுத்தியே கூட்டம் இருக்க தம் போட்டு வச்ச பிரியாணிய எடுத்து சிக்கன் பீஸோட, ரைத்தா, கிரேவி, பிரியாணி அப்படின்னு கடகடன்னு பார்சல் பண்ணி கொடுத்துக்கிட்டே இருக்காங்க

பாக்குறதுக்கு கலர் ஃபுல்லா, லெக் பீஸ் ஓட, ரைத்தா, பிரட் அல்வா, கிரேவி உடன் குறைந்த விலையில் அதாவது 150 ரூபாய் என்ற விலையில ருசியா இருக்கிறதுனால இந்த கடைக்கு எப்போதுமே ஒரு தனி கூட்டம் இருந்துகிட்டே இருக்குண்ணா பாருங்களேன்

மதுரைனாலே உணவுக்கு ஃபேமஸ் சொல்லுவாங்க ஆனா மதுரையில ஒரு பக்கவான ஹைதராபாத் பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு நினைச்சா நாங்க இந்து கடைக்கு வந்து தான் சாப்பிடுவோம்

ஏன்னா அந்த அளவுக்கு ஹைதராபாத்தில் இருப்பது போலவே இங்கு ஹைதராபாத் பிரியாணி கிடைக்குது அப்படின்னு சொல்றாங்க

பாகற்காயிலிருந்து கசப்பை நீக்க 8 எளிய குறிப்புகள்.!