3 நாள் மட்டுமே அனுமதி... சதுரகிரி மலைக்கு படையெடுத்த மக்கள்.!

Scribbled Underline

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்

இந்த சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம், மகாலிங்கம் என ஐந்து வகையான சிவலிங்கங்களை கொண்ட இந்த கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது

அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வொரு மாதமும் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் என மாதத்தில் எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

ஒவ்வொரு முறையும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும் போதெல்லாம் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களால் சதுரகிரி மலை சற்று கூட்டமாக காணப்படும்

அதிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் மேற்சொன்ன நாட்களில் வழக்கத்திற்கு அதிகமாக கூட்டம் இருக்கும்

இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது தெரியுமா.?

– ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் - டாக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை

உலகின் உயரமான மனிதர் இவர் தான்! ஏன் இந்த அசுர வளர்ச்சி?

More Stories.

அந்த வகையில் தை அமாவாசையை முன்னிட்டு பிப்ரவரி 7 முதல் 10 வரையிலான நாட்களில் பக்தர்கள் சதுரகிரி மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது

இதனை தொடர்ந்து பிப்ரவரி 7 முதல் 10 வரை உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து மலையேறி தரிசனம் செய்தனர்