வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் சோப்புகள்.!

நம்முடைய அன்றாட வாழ்வில் காலையில் பயன்படுத்தும் பற்பசை தொடங்கி நாம் உண்ணும் உணவு என அனைத்திலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களே அதிகம் உள்ளது. இந்த நவீன யுகத்தில் அதிலிருந்து நாம் மீண்டு வருதல் என்பது சற்று கடினமானதாக இருக்கும்

அதனை முன்னெடுக்கும் வகையில் நாம் பயன்படுத்தும் சோப்புகளில் இருக்கும் கெமிக்கல் குறித்து அறிந்து கொண்டு இயற்கையாக சோப் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் சௌந்தர்யா

நாம் பயன்படுத்தும் சோப்பில் இருக்கும் கெமிக்கலில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து கொண்டு நாமே சோப் தயாரிக்கலாம் என்று ஆன்லைன் மூலம் பயிற்சி எடுத்ததாகவும், கடந்த எட்டு மாத காலமாக இயற்கையாக வீட்டில் சோப் தயாரிக்கும் பணியையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் நான் தயார் செய்யும் சோப் இயற்கையை பாதிக்காத வகையில் தயாரித்தேன். எனவே, என்னுடைய சோப்பிற்கு Earth Friendly என்ற பெயரை வைத்ததாகவும் தெரிவித்தா

இவர் தயாரிக்கும் சோப்புகளிலும் கெமிக்கல் பயன்படுத்துவது இல்லை. அதனை பேக் செய்யும் முறைகளும் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருப்பதால் இயற்கைக்கு உகந்ததாகவும் பூமிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

தேங்காய் எண்ணெய், ஆவாரம் பூ, குப்பைமேனி, பழச்சாறு, மூலிகை இலைகள் இப்படி பலவகையான சோப்புகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்

இந்த சோப்புகளில் பயோ என்சைம் பயன்படுத்துவதால் அதனை பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஒரு சோப்பினை 75 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார்