பங்குனி பௌர்ணமி: இந்த 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலை ஏற அனுமதி.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது

தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக மலையேற்ற தளமாக உள்ள இந்த கோவிலுக்கு மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் என எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

பாதுகாப்பு காரணங்களுக்காக மேலே குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்களை மலையேற வனத்துறை அனுமதித்து வரும் நிலையில், ஒவ்வொரு முறை அனுமதி வழங்கப்படும் போதும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்

இந்நிலையில் பங்குனி உத்திரம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் மார்ச் 22 முதல் 25 வரையிலான நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

இது தொடர்பாக வனத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற் சொன்ன தேதிகளில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மலையேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது வெயில் காலம் என்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு எடுத்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது