அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பன்னீர் கரும்பு... அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.!

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் தொகுப்பில் பன்னீர் கரும்பும் இடம்பெறும் என்று அறிவித்துள்ளது

இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் விவசாயிகள் 500  ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகளை பயிரிட்டு வருகின்றனர்

பொங்கல் பண்டிகைக்கு 2 வாரங்களே உள்ளதால் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன

பொங்கல் பண்டிகையும் நெருங்கி உள்ளதால்  அரசு கொள்முதல் செய்யும் பன்னீர் கரும்புகளை அரசு கட்டு ஒன்றினை 400 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு நேரடியாக கொள் முதல் செய்ய வேண்டுமென கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரை செலவு செய்துள்ளோம் எனவும், போன வருடம் அரசாங்கம் சொன்னது போல் ஆறு அடிக்கு கரும்புகள் இருந்தால் தான் கொள்முதல் செய்வோம் என கூறியிருந்தார்கள்

இந்நிலையில் விவசாயிகள் ஆகிய நாங்கள் தற்போது ஆறு அடிக்கு மேல் கரும்புகளை வளர்த்து உள்ளோம்.

Stories

More

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா?

இரவில் மட்டும் சாப்பிடவே கூடாத 6 உணவுகள்..

குளிர்காலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

உரம் விலை அதிகரித்துள்ளதால் அரசு கொள்முதல் செய்யும்போது வரக்கூடிய பொங்கல் பண்டிகை தங்களுக்கு இனிப்பாய் அமையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து கரும்பு விவசாயி ராஜா கூறுகையில், “எங்களிடம் கரும்பு வளமாக உள்ளன. அரசாங்கம் எங்களிடம் நல்ல விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்

ஏனென்றால், உரம் விலை அனைத்தும் விலை ஏறிவிட்டது. இதனால்,  நல்ல விலைக்கு கரும்பு ஏற்றுமதி செய்தால்தான் எங்களுக்கு லாபம்”  என விவசாயி ராஜா கோரிக்கை வைத்தார்

ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்கள் என்று தெரியுமா.!