ஆபத்தை உணராமல் நீரில் மூழ்கிய தரைப்பாலத்தை கடக்கும் மக்கள்.!

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. 95 சதவீதத்திற்கும் மேலான நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பருக்கு ஏற்பட்டுள்ளது

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் சேந்தனூர் இடையே செல்லக்கூடிய தரைப்பாலம் முழுமையாக மூழ்கிய நிலையில் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை மூலம் தடுப்புகள் போடப்பட்டுள்ளது

இதன் காரணமாக விழுப்புரம்-கடலூர் மாவட்டம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பில்லூர், பிள்ளையார்குப்பம் ,ராவனாவரம், அகரத்துமேடு, திருப்பாச்சனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சேர்ந்தனூர், வெள்ளாக்குளம், அரசமங்கலம், குச்சிபாளையம்,

பில்லூர், உள்ளிட்ட 10 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களை கடந்துபண்ருட்டி, கடலூர் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.மேலும் மழை நீர் அதிகரித்து காணப்படுவதால் அக்கிராம மக்கள், இளைஞர்கள் அபாயத்தை உணராமல் தரை பாலத்தில் நடந்து செல்கிறார்கள்

தரைப்பாலம் மூழ்குகியது குறித்து பேசிய அப்பகுதி கிராம மக்கள், தாங்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு இந்த தரைப்பாலத்தை தான் தாண்டி செல்ல வேண்டிய நிலையே இருக்கிறது

சேத்தனூர் அரசமங்கலம், ஆர்.கே குச்சிபாளையம் போன்ற கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த தரைப்பாலம் வழியை கடந்து தான் பில்லூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். பள்ளி மாணவர்களும் தற்போது ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது

Stories

More

கந்த சஷ்டி விரதம் எடுப்பது எவ்வாறு..?

மாலை வேளையில் மனதை லேசாக்கும் திருச்சி மாநகராட்சி பூங்கா..

நிரம்பி வழியும் தேனி சண்முக நதி அணை...!

இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எங்களுக்கு மேம்பாலம் அமைத்து தரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்

எனவே எங்களின் நலன் கருதி மேம்பாலத்தை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சஷ்டி விரதத்தால் இவ்வளவு நன்மைகளா.!