விழுப்புரத்தில் உள்ள பிரதான சாலைகள் சேரும் சகதியுமாகவும், குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கியபடியும், மண்சாலைகளாகவும், பாதி சாலை இல்லாததாகவும் காட்சி அளிக்கிறது
பல இடங்களில் நகராட்சி ஊழியர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் தெரிவிக்கின்றனர்
அதாவது விழுப்புரம் நகரின் முக்கிய நகரங்களான திருநகர், லட்சுமி நகர், கம்பன் நகர், வெங்கடேச நகர், ஆசிரியர் நகர், கணேஷ் நகர், சுதாகர் நகர்,கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் உள்ள
சாலைகள் அனைத்தும் குண்டு குழிகளாகவும் சேரும் சகதியுமாகவும், குண்டு குழிகளாகவும், மழை பெய்தால் மழை நீர் தேங்கிய படியும் காட்சி அளிக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது
வாகனங்கள் அச்சாலை வழியாக செல்ல முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேலும் சாலை முழுவதும் குண்டு குழிகளாக உள்ள நிலையில் அவ்வழியே வாகனங்களில் வருபவர்கள் கீழே இறங்கி பாதி தூரம் நடந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது
ஆகையினால் நகராட்சி உடனடியாக தற்காலிக சாலை அமைத்து தாங்கள் செல்வதற்கு வழி வகுக்க வேண்டும் என விழுப்புர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்