நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவர் யார் தெரியுமா.? 

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி

2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தவர் நடிகை அதிதி ராவ்

நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் அதிதி ராவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதை தொடர்ந்து, சைக்கோ, செக்கச்சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து தமிழில் மிகவும் பிரபலமானார்

நடிப்பு மட்டுமின்றி தமிழில் பாடகியாகவும் கலக்கினார் அதிதி ராவ். ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஜெயில்' படத்தில் இவர் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் மிகவும் பிரபலமானது

நடிகர் சித்தார்த்துடன் இணைந்து 'மஹாசமுத்திரம்' படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர்

இருவரும் ஒன்றாக ரீல்ஸ் செய்வது, வெளியே ஒன்றாக செல்வது, நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்பது என்று இருந்து வந்தனர்

இந்த புகைப்படங்கள் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்த நிலை, இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வெளியானது

ஆனால், இதுகுறித்து அதிதி ராவ், சித்தார்த் இருவரும் எந்த விதமான பதிலும் கொடுக்கவில்லை

சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் நிச்சயத்தர்தம் ரகசியமாக நடந்து முடிந்தது. மேலும் விரைவில் இருவரின் திருமணம் நடைபெரும் என எதிர்பார்க்கபடுகிறது

இந்த நிலையில் நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது 21வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதிதி

பாலிவுட் நடிகரான சத்யதீப் மிஸ்ரா பல படங்களில் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்தவர். அதிதி ராவ் சத்யதீப் மிஸ்ரா இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்

மேலும், சத்யதீப் மிஸ்ரா பாலிவுட்டின் பிரபல நடிகை குப்தாவின் மகளான பாலிவுட்டின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான மசபா குப்தாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது தனது முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறார்

ரசிகர்கள் பலருக்கும் சித்தார்த்துக்கு இது இரண்டாவது திருமணம் என்ற தகவல் தெரிந்த ஒன்றே, ஆனால் நடிகை அதிதி ராவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்ற தகவல் பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது

next

இந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் விஜய்… எந்த படம் தெரியுமா.?