நடிகை அமலா பால் தனது ஆண் நண்பரான ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் இயக்குனர் விஜயை 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்
விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா ஆகிய திரைப்படங்களில் அமலாபால் நடித்த போது இருவருக்கும் காதல் மறந்து 2014-ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது
ஆனால் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். மேலும் நீதிமன்றம் வரை சென்று அதிகாரப்பூர்வமான விவாகரத்தும் அவர்கள் பெற்றனர்
இதன்பிறகு பாண்டிச்சேரியில் தங்கி இருந்த அமலாபால், பயணங்கள் செல்வது, பிடித்த இடத்திற்கு செல்வது என தன்னுடைய வாழ்வியலை தொடர்ந்து வந்தார்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது காதலை வெளிப்படுத்தினார்
அந்த வீடியோவை ஜெகத் தேசாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர்கள் இருவரும் முத்தமிட்டு நடனமாடும் வீடியோவும் அதில் பதிவிடப்பட்டிருக்கிறது
கோவாவை சேர்ந்த ஜகத் தேசய் Scilla Villas என்ற நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியாக உள்ளார்
இந்நிலையில் அமலாபால் ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் ரெசார்ட்டில் நடைபெற்றுள்ளது
இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்
அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜகத் தேசாய், 'இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகப் பெண்ணுடன் இந்த வாழ்நாள் முழுவதும் கைகோர்த்து நடப்பேன்...' என பதிவிட்டுள்ளார்
தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அமலாபால், 'எங்களை ஒன்றிணைத்த அன்பையும் அருளையும் கொண்டாடுகிறோம்..... என் தெய்வீக ஆண்மையுடன் திருமணம் செய்துகொண்டேன்... உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்..' என்று பதிவிட்டுள்ளார்
இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்