ராமநாதசுவாமி கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சுவாமி தரிசனம்.!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் லியோ படம் வெற்றியடைய வேண்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார்

இதனை தொடர்ந்து செல்ஃபி எடுக்க குவிந்த பக்தர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெற்றியடைய வேண்டி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருவண்ணாமலை, திருப்பதி போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றார்

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் மற்றும் துணை இயக்குநர்கள் இன்று காலை ராமேஸ்வரம் வந்து லியோ படம் வெற்றி அடைய வேண்டி ராமநாதசுவாமி கோவில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு பின்பு ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் வணங்கினார்

Stories

More

மதுரையின் டாப் 3 டூரிஸ்ட் ஸ்பாட் இதோ..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த அவலநிலையா..!

12 ஜோதிர் லிங்கங்களும் ஒரே இடத்தில்..!

இதன்பின் கோவிலை விட்டு வெளியே வந்த பிறகு ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், அவரிடம் புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது

கொலு இப்படி தான் வைக்க வேண்டும்.!