தஞ்சையில் உள்ள திகிலூட்டும் பழங்கால தூக்கு மேடை.!

தஞ்சை சேவப்பநாயக்கன் ஏரி மேல் கரையில் பழங்கால கட்டிடம் மேல் கூறையின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது

இது 200 ஆண்டுகள் பழமையான தூக்கு மேடை எனவும் மராட்டிய மன்னர் காலத்தில் கொடுமையான குற்றங்களை செய்தவர்களை தூக்கு மேடையில் ஏற்றிக் கொல்வது அப்போதைய வழக்கமாக இருந்துள்ளது.

இது உன்மையிலேயே தூக்கு மேடை தானா எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய முழு விபரம் இது வரை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கவில்லை

தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவை கட்டுமானத்தை கொண்டுள்ளது. 30 அடி அகலத்திலும் 200 அடி நீளத்திலும் கட்டப்பட்டுள்ளது.

மேலும் தூக்கு மேடை எனப்படும் இந்த பழமையான கட்டிடத்தில் மேல்கூரை ஏதும் இல்லாமல் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே மேல் கூரை இடிந்து விழுந்ததாக அப்பகுதி சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

அதேபோல் இந்தக் கட்டடத்தின் கீழ் பகுதியில் 10 அடி உயரத்தில் 200 அடி தூரத்திற்கு சுரங்கம் ஒன்று உள்ளது. சுரங்கத்தின் ஆங்காங்கே காற்று உள்ளே வருவதற்காகசிறிய அளவிலான துளைகளும்உள்ளது

இந்த கட்டிடம் ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் வெவ்வேறு வகையான பயண்பாடுகளுக்கு பயண்படுத்தப்பட்டதாகவும், நீர் மேலாண்மைக்காக பயண்படுத்தப்பட்தாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த தூக்கு மேடையை இடிக்க ஒரு சிலர் வந்தபோது பொதுமக்கள் ஒன்று திரண்டு இதை இடிக்க கூடாது எனவும், 

இது மிகவும் பழமையானது இதை பாதுகாக்க வேண்டும் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

குடிகாரர்களை திருத்தும் கோவில்.. எங்கு உள்ளது தெரியுமா.?