விழுப்புரம் மாவட்டம் நாரசிங்கனூர் பகுதியில் உள்ள பனங்காட்டில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பனை சூழ்நிலையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
விழுப்புரம் மாவட்டம் நாரசிங்கனூர் பகுதி பொதுமக்கள் பலர் பனை மரங்களை நம்பி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்து தொழில் செய்து வருகின்றனர்.
பனை மரத்திலிருந்து வரும் பனை கிழங்குகள், பனைகள்ளு போன்ற பொருட்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர்.
அது மட்டுமல்லாமல் பனை மரத்தில் இருந்து வரும் பனங்கொட்டை பொருட்களை வைத்து அவ்விடத்தை அலங்காரம் செய்தனர்.
அதன் பின்பு அப்பகுதி மாணவர்கள் சிலம்பம், வால் சண்டை, சுருள்வால் சுற்றுவது போன்ற பல விளையாட்டுகளை செய்து அசத்தினர்.
அதன் பிறகு பனை மரத்திற்கு பொங்கல் மற்றும் வயல்களில் விளைந்த காய்களை வைத்து படையெடுத்து மாணவர்கள் மட்டும் அப்பகுதியினர் பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடினர்.
மேலும் இது குறித்து அப்பகுதி மாணவர்கள் கூறுகையில் பனை சூழலை பாதுகாக்கும் வகையிலும் பனை மரத்தின் முக்கியத்துவம் குறித்து மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பொங்கல் பண்டிகையை நாங்கள் கொண்டாடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.