நெல்லையில் பீடி சுற்றும் பெண்களின் இன்றைய நிலை இதுதான்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மறைமுகமாகவும், நேரடியாகவும் 5 லட்சம் வரை தொழிலாளர்கள் உள்ளனர்

நெல்லையில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பீடித்தொழில் பிரதானமாக உள்ளது. நெல்லையில் உள்ள பெண்கள் விவசாயம் வீழ்ச்சியின் காரணமாக பீடி சுற்றும் தொழிலுக்குள் நுழைந்தனர்

ஆயிரம் பீடி சுற்றுவதற்கு சுமார் 12 மணி நேரம் வரை ஆகும். தனது கணவன் குழந்தைகளை பார்த்துக் கொண்டு தொழிலை செய்து வருகின்றனர். இதற்காக அரசாங்கம் 257 ரூபாய் 18 காசுகள் வழங்குகிறது

இதுகுறித்து AICCTU சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன் கூறுகையில், “குறிப்பாக பீடி நிர்வாகம் கொடுக்கக்கூடிய இலை தரம் குறைந்து இருப்பதால் வெளியே அவர்கள் 300 ரூபாய் வரை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு கூலி இழப்பு ஏற்படுகிறது

பீடி கம்பெனிகள் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய லீவு சம்பளம், பென்ஷன் உள்ளிட்டவை சரியாக கொடுக்க மறுக்கின்றன. 2015ம் ஆண்டுக்கு முன்பு வரை இதனை பீடி நிர்வாகம் சரியாக கொடுத்து வந்தது

குடும்ப சூழ்நிலையால் கடன் வாங்குவதால் பிரச்சினையிலும் சிக்கி உள்ளனர். AICCTU சங்கத்தினர் பிடி தொழிலாளர்களுக்காக வீட்டு மனை பட்டா, 5 லட்சம் வீடு கட்டுவதற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது" என தெரிவித்தார்

இந்நிலையில் பீடி சுற்றும் தொழிலாளி மாரியம்மாள், தங்களுக்கு வழங்க வேண்டிய வார சம்பளத்தை சரியாக கொடுக்க வேண்டும்

தங்களின் குழந்தைகள் படிப்பதற்கு மீண்டும் ஸ்காலர்ஷிப்பை வழங்க வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்

இயற்கையான முறையில் கலர் கலராக தயாராகும் விநாயகர் சிலைகள்.!