உணவுகளுக்கு சுவை கூட்டுவது முதல் அதன் மருத்துவ குணங்களால் நோய்களை குணமாக்குவது வரை என பழங்காலம் தொட்டே இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது மசாலா பொருட்கள்
வெறும் வயிற்றில் கொத்தமல்லி விதை கலந்த நீரை குடிப்பதால் வயிறு உப்புசத்தையும், வயிறு கோளாறுகளையும் சரி செய்யலாம். இந்த நீரை குடிப்பதால் நமது மெட்டாபாலிக் விகிதமும் மேம்படுகிறது. இதன் காரணமாக நம் உடல் எடை குறையும்
கொத்தமல்லி நீரில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகளவு உள்ளது. இதனால் நம் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க கொத்தமல்லி நீர் உதவுகிறது.
முதலில் கொத்தமல்லி விதைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அடுத்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கொத்தமல்லி விதையை ஒரு கிளாஸ் நீரில் இரவு முழுவதும் ஊற வையுங்கள். அடுத்த நாள் காலை இந்த கலவையை நன்றாக கொதிக்க வைத்து பருகுங்கள்
கொத்தமல்லி விதையை எடுத்துக் கொண்டால், இயற்கையாகவே அது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதோடு நம் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இயற்கையாகவே கொத்தமல்லி விதைகளில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி நமது மெட்டாபாலிஸத்தை அதிகரிக்க உதவும் நார்ச்சத்தும் ஆண்டி ஆக்ஸிடெண்டும் இதில் அதிகளவு உள்ளது. கொத்தமல்லி நீரை குடிக்கும் போது, இயற்கையாகவே உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் குறைய தொடங்குகிறது
கொத்தமல்லி விதை கலந்த நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், நமது உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. இந்த கொத்தமல்லி நீரோடு கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் தேனை கலந்து குடித்தால், உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
கொத்தமல்லி நீரில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதோடு நிறைய மினரல்களையும், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் இந்த நீரை குடிப்பதால், நமது சருமம் பளபளப்பாவதோடு முகப்பருக்கள் காணாமல் போகிறது
காலையில் எழுந்ததும் நீர் ஆகாரங்களை சாப்பிடுவதால் நம் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்கிறது. இதனால் நமது உடலில் உள்ள எலெக்ட்ரோலைட் பேலன்ஸை சரிவிகிதத்தில் பேண இது உதவுகிறது. காலையில் சூடான கொத்தமல்லி நீரை குடிப்பதால் நம் உடலில் உள்ள நச்சுகள் எளிதாக வெளியேறுகின்றன