தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு கல்வியில் சம உரிமை ஏற்படுத்தும் வகையில் குழந்தை வடிவிலான மனித சங்கிலி அமைத்து மாணவிகள் அசத்தல்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த மேல காசாக்குடியில் இயங்கும் குட் ஷெப்பர்ட் ஆங்கில பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது
பள்ளி முதல்வர் ஜாய் தாமஸ் முன்னிலையிலும் பள்ளி தாளாளர் ரான்சன் தாமஸ் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாத்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
அதன் ஒருபகுதியாக 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றிணைந்து பெண் குழந்தைகளுக்கு கல்வியில் சம உரிமை,
சம வாய்ப்பு, வழங்கிடும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை வடிவிலான மனித சங்கிலி அமைத்து மாணவிகள் அசத்தினர்