புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா.?

தென்காசி மாவட்டத்தில் அருவியும் நீரோடையும் சேர்ந்த மாதிரி ஒரு பிளேஸ் தான் புளியங்குடியில் இருக்கிற 'முந்தல் அருவி'

முந்தல் அருவி தென்காசியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில உள்ளது. புளியங்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில உள்ளது

புளியங்குடிக்கு போறதுக்கு முன்னாடி புன்னையாபுரம் பக்கத்துல தான் இந்த முந்தல் அருவி உள்ளது. இது கிருஷ்ணாபுரம் ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதிக்கு உட்பட்டது

புன்னையாபுரத்திலிருந்து முந்தல் ரோட்ல போற வழியிலேயே மொத்தம் 5, 6 கோவில்களை பார்க்க முடியும். கற்பகாம்பாள் தேவி கோவில், கருப்பசாமி போன்ற கோவில்களையும் பார்க்க முடியும். மலைப்பகுதிங்கறதுனால் இங்கே நிறைய குரங்குகளையும் பார்க்க முடியும்

முந்தல் அருவியில் எல்லா நேரமும் தண்ணீர் வருவதில்லை. புளியங்குடி சுற்றுவட்டார பகுதியில் நல்ல மழை பெய்தால் இந்த அறிவியில் நன்றாக தண்ணிர் வரும். இது பார்ப்பதற்கு  சிற்றருவி மாதிரியான அமைப்புல இருக்கும்

இந்த இடத்தை சுத்தி ஓங்கி உயர்ந்த மரங்களாக இருக்கிறதுனால இதுல குளிக்கிறதுக்கு ஒரு பிரைவேட்டான ஃபீல் கொடுக்கும்

அதுமட்டுமில்லாமல் அந்த மரத்து வழியா தான் அந்த நீரோடையும் போயிட்டு இருக்கும். அதை பாக்குறதுக்கு நிச்சயமா ஒரு மன நிம்மதியை கொடுக்கும்.

Stories

More

தஞ்சை அருகே சுற்றுலா தளமாக மாறி வரும் குப்பை கிடங்கு..! 

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இன்னும் இந்த 'முந்தல் அருவி' பலருக்கும் தெரியபடாத ஒரு 'hidden gem' ஆக தான் உள்ளது

புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கிற மக்கள் மட்டும்தான் அதிக அளவில் இன்னும் இந்த முந்தல் அருவிக்கு வந்து குளிச்சிட்டு போறாங்க 

செல்லப்பிராணிகளுக்கு தனியாக ஒரு துணிக்கடை இருக்கா?