பார்த்தவுடன் கவரும் பைக்காரா நீர்வீழ்ச்சி... ஊட்டி போறிங்கன்னா இந்த ஸ்பாட்டை மிஸ் பண்ணிடாதீங்க.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பைக்காரா நீர்வீழ்ச்சியும் ஒன்று. ஊட்டி - கூடலூர் முக்கியச் சாலையில் இந்த பைக்காரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது

பைக்காரா என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியைக் காண தமிழகத்தில் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர்

பைக்காரா நீர்வீழ்ச்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் இடம் வரை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவையும் உள்ளது

தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நீர்வீழ்ச்சியைக் காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்

சுற்றுலாப் பயணிகள் இந்த அருவியைக் கண்டு ரசிக்க ஏதுவாக மேல் பகுதியிலிருந்து கீழ்ப் பகுதி வரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது

மேலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் புகைப்படம் எடுக்கப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது

இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகப் பாடல்களும் இங்கு ஒளிபரப்பப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வார இறுதி நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்

வீக் எண்ட் ட்ரிப் என அண்டை மாவட்ட இளைஞர்களும் வார இறுதி நாட்களில் இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சியைக் காண்பதற்கு அனுமதிச் சீட்டு பெற்று உள்ளே செல்ல வேண்டும்

மேலும் இயற்கை எழில் கொஞ்சம் அந்த அருவியின் சத்தம் சுற்றியுள்ள காடுகள் மரங்கள் அதற்கிடையில் ஊர்ந்து வந்து கேட்கும் போது மனதை லயிக்கச் செய்கிறது

next

அந்த படத்தில் நடித்தது தான் வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு – நயன்தாரா