புகை பிடிக்கும் பக்கத்தை நிறுத்த வேண்டுமா.? இந்த எளிய வழிமுறையை பாலோ பண்ணுங்க.!

புகைப் பழக்கம் நம்மை பாதித்து, மனைவி மக்களை பாதித்து, சுற்றி இருப்பவர்களை பாதிக்கிறது

இதில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை முதலில் பாதிக்கின்றது. மேலும் நம்முடைய மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது

ஞாபக சக்தி குறைவு, பதட்டப்படுதல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் புகை பிடிப்பவரை மட்டுமல்லாது அவரின் சந்ததி வாரிசுகளுக்கும் இந்த பாதிப்புகளை மரபணு வழியாக கடத்தி விடுகிறது

புகை பழக்கத்துடன் மது அருந்தும் பழக்கமும் கொண்டவராக நீங்கள் இருந்தால், இரண்டையும் ஒரே நேரத்தில் விட்டுவிடுவது சிறந்த முடிவு

ஏனென்றால், உங்களுடைய புகைக்கும் ஆசையை மதுபானம் எளிதில் தூண்டிவிடலாம். புகைப்பதை நிறுத்த ஒரு தேதியை முடிவுசெய்தபின் அதைப் பின்பற்ற எந்த மனத்தடை வந்தாலும் அதை உடைத்தெறியுங்கள்

புகைப்பதை நிறுத்துவதால் வரும் வேதனைகள் உங்களை வருத்தினாலும் அவற்றைச் சமாளிக்க மன உறுதியே முதன்மையாகத் தேவைப்படுவதால் அதைத் தக்க வைத்துகொள்வதால் அதிவேகமாக அதிலிருந்து உங்களால் விடுபட முடியும்

ஒவ்வொரு நாளையும் புகையிலை இல்லாத நாளாக்க முடிவு செய்யுங்கள். புகையிலையை உடனடியாக நிறுத்துவது எளிது. படிப்படியாக நிறுத்துவது என்பது தோல்வியைத் தரும்

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்களை ஆரோக்கியமாக வைக்கும். புகையிலையை நிறுத்தினால் வரும் சோர்வு, தலைவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் 5 முதல் 7 நாட்கள் வரையே இருக்கும்

புகைப்பதை நிறுத்தியபின் அதை நினைவூட்டும் எதுவொன்றையும் உங்கள் வீட்டிலோ, அலுவலத்திலோ வைத்திருக்காதீர்கள்

உதாரணத்துக்கு ‘ஆஷ் ட்ரே’, ‘சிகரெட் ஹோல்டர்கள்’, ‘சிகரெட் லைட்டர்’ என எதுவாக இருந்தாலும் அதை குப்பைத்தொட்டியில் வீசியெறியுங்கள்

சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது அதை 5 நிமிடம் தள்ளிப்போடவும். அந்த எண்ணம் தானாகவே குறைந்து விடும். நிறைய நீர் அல்லது பழச்சாறு எடுத்துக்கொள்ளுங்கள்

பச்சைக் காய்கறிகளையும் உண்ணுங்கள். எப்பொழுதும் மனதை அமைதியாக வைத்திருங்கள். நல்ல இசையைக் கேளுங்கள். தியானம் செய்யுங்கள்

next

இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்.!