இது கோயிலா... குளமா.? சங்கரநாராயணர் கோயிலில் தேங்கிய மழைநீர்.!

தமிழகத்தில் புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் மிதமான அளவு மழை பெய்தது

தென்காசி செங்கோட்டை குற்றாலம் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் மிதமான அளவு அவ்வப்போது மழை பெய்து வந்தது

இதனை தொடர்ந்து சங்கரன்கோவிலில் இரவு ஒரு மணி இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலூர் பிரகாரங்களில் பக்தர்கள் செல்ல முடியாத வகையில் தண்ணீர் தேங்கியுள்ளது

மேலும் கோவிலில் சன்னதிகளுக்கு உள்ளே ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருப்பது பக்தர்கள் நடப்பதற்கு சிரமமாக அமைந்துள்ளது

சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு முன்பு ஒரு அடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது

தூய்மை பணியாளர்கள் முழு வீச்சில் கோவிலில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்

Stories

More

தஞ்சை அருகே சுற்றுலா தளமாக மாறி வரும் குப்பை கிடங்கு..! 

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

சங்கரநாராயணர் சன்னதியில் மண்டபத்தின் இரு புறங்களிலும் மழை நீர் விழும் காட்சியினை கோபுரத்தோடு பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்

கோவையில் பாகுபலி குழுவினர் அமைத்த குதிரை பந்தய சிலை.!