நல்ல மாம்பழத்தைக் கண்டறிவது எப்படி... உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அட்வைஸ்.!

கோடை காலம் வந்துவிட்டது, இந்த பருவத்தில் தவிர்க்க முடியாத ஒன்று மாம்பழம்

பழம் அதன் இனிப்பு சுவை, ஜூசி கூழ், நறுமணம் மற்றும் நீண்ட காலமாக ஏராளமான மக்களுக்கு பிடித்த கோடை பழமாக உள்ளது

ஆனால் சமீபகாலமாக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

எனவே செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதைப் பொதுமக்கள் கண்டறிவது எப்படி என ராமநாதபுரம் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ள விவரங்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கும்போது இயற்கையான வாசனை வருகிறதா என்று பார்க்கவேண்டும்

மாம்பழம் வெளியில் பழுத்து உள்ளே காயாக இருந்தால் அதனை வாங்கக்கூடாது‌

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

செயற்கை முறையில் கல் வைத்த மாம்பழம் என்றால் அந்த மாம்பலத்தில் ஆங்காங்கே தீக்காயம் போல் கருப்பாகக் காணப்படும்

ஒரே மாதிரியாகப் பழுத்திருந்தால் அந்தப் பழங்களில் செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்

மாம்பழங்கள் கீழிருந்து மேலாகத் தான் பழுத்து இருக்க வேண்டும்

மாம்பழங்களைப் பொதுமக்கள் வாங்கும் போது இதனைக் கவனித்து வாங்கி உண்ண வேண்டும்