பண்ணிரெண்டு ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றாக, தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என மூன்று பெருமைகளையும் கொண்டு அமைந்துள்ளது ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில்
பாவங்கள் போக்கி புண்ணியத்தினை அளிக்கும் ஸ்தலம் என்பதால் தினமும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன
இந்நிலையில், அக்னி தீர்த்தம் கடலானது காலை முதல் 50 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது
பாறைகள், கடலில் உள்ள சிப்பிகள், சங்குகள் சுவாமி சிலைகள் அனைத்தும் வெளியில் தென்பட்டது
மேலும், அமாவாசையை முன்னிட்டு முக்கிய அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கி இருந்ததால் பாறைகள் மீது நடந்து சிறிய தூரம் சென்று நீராடினர்
ஆனால் முதியவர்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்
இந்த நிகழ்வு அமாவாசை, பௌர்ணமி நாளில் நடைபெறும் வழக்கமான ஒன்றுதான் என்று மீனவர்கள் தெரிவித்தனர்
மேலும் கடல் நீரோட்டம் மாறும்போது இவ்வாறு உள்வாங்கி காணப்படும் பிறகு மாலை நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிடும் எஎன்றனர்
கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!