நெல்லையில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை இரு தினங்களிலும் கூந்தன் குளம், காடன்குளம், திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகம், அரமணநேரி, ராமநேரி, டானார் குளம், சிலையம், விஜய நாராயணம், வேந்தான் குளம்,
நயினார் குளம், பாலாமடை, ராஜவல்லிபுரம், குப்பக்குறிச்சி, கல்குறிச்சி குளங்கள், கண்டியப்பேரி, கங்கைகொண்டான், சாரல் குளம், முக்கூடல் மற்றும் பிரான்சேரி குளங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது
பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் வன ஆராய்ச்சியாளர்கள் நெல்லை மாவட்ட வன அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களை கணக்கெடுக்க வரும் தன்னார்வலர்களுக்கு பாளை என்ஜிஓ காலனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் வரும் 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
இத்தகவலை நெல்லை மாவட்ட வனத்துறை அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்