கண்களை கட்டி மாணவர்கள் சாதனை... உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்.!

ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் 240 மாணவ, மாணவிகள் வண்ணம் அறிதல் சாதனைக்காக கண்களைக் கட்டிக் கொண்டு ஒன்று கூடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்து ஏ.கே.சமுத்திரத்தில் (ஞானோதயா) தனியார் இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் விரிக் ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம்

நடத்தும் கண்களை கட்டிக்கொண்டு வண்ணங்களை கண்டுபிடிக்கும் புலன் உணர்வு திறன் போட்டி நடைபெற்றது

பள்ளியில் பயிலும் 240க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது இரு கண்களையும் கட்டிக்கொண்டு விரிக்ஷா புக் ஆஃப் வேல் ரெகார்டு நிறுவனம் கூறும் வண்ணங்களை கண்டுபிடித்து

அதில் அனைத்து மாணவ, மாணவிகளும் ஒரே மாதிரியாக வண்ணங்களை கண்டுபிடித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

அதனைத் தொடர்ந்து கண்களை கட்டிக்கொண்டு வில்வித்தை, பரதநாட்டியம், சிலம்பம், யோகா, சதுரங்கம், சைக்கிள் ஓட்டுதல், வண்ணம் தீட்டுதல்,போன்ற திறன்களை செய்து காட்டி உலக சாதனையை படைத்தனர்

விரிக்ஷா புக் ஆஃப் வேல் ரெகார்ட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழை தனியார் தொலைக்காட்சி நடிகர் ராஜ்மோகன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்