உடல் எடையைக்குறைப்பதற்கு உடற்பயிற்சியை பலர் நிச்சயம் மேற்கொள்வார்கள். இந்நேரத்தில் நீங்கள் கடுங்காபி அதாவது பிளாக் டீ குடிக்கும் போது உங்களுக்கு ஆற்றலை அளித்து நல்ல வொர்க் அவுட் செய்ய உதவியாக இருக்கும். அதிகப்படியாக நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் உங்கள் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவியாக உள்ளது.
கடுங்காபி
நீங்கள் அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு காய்கறிகளில் செய்யப்படும் சூப் அல்லது ஜூஸ்களை நீங்கள் பருகலாம். குறிப்பாக கேரட், பீட்ரூட், பாகற்காய் போன்ற காய்கறிகளைக் கொணடு நீங்கள் பானம் தயாரிக்கலாம். இது உங்களது ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவியாக உள்ளது.
காய்கறி சூப்
உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது எலுமிச்சை. வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை அகற்ற உதவியாக உள்ளது.
எலுமிச்சை ஜூஸ்
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் பலர் உபயோகிக்கும் பானங்களில் ஒன்று தான் க்ரீன் டீ. தினமும் நீங்கள் இதை காலை அல்லது மாலை என இரு வேளைகளில் குடிக்கும் போது உடலில் இருக்கு அதிகப்படியாக கொழுப்பை குறைப்பதற்கு உதவியாக உள்ளது.
க்ரீன் டீ
தினமும் இரவு ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை (சோம்பு) இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக நீங்கள் மேற்கொள்ளும் போது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் குறைக்க உதவியாக உள்ளது.
சோம்பு தண்ணீர்
இதுபோன்று பானங்களை உடற்பயிற்சியோடு உங்களது வாழ்க்கையில் நீங்கள் மேற்கொண்டுவந்தாலே நிச்சயம் உடல் எடையைக்குழறக்க முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இனி எந்த சிரமமும் இன்றி நீங்களும் டிரை பண்ணிப்பாருங்கள்.