இந்தியாவிலேயே முதன்முதலாக, RIL மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் ஆனந்த் அம்பானியின் தலைமையின் கீழ் வந்தாரா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் காயமடைந்த, துன்புறுத்தப்பட்ட மற்றும் அச்சுறுத்தப்பட்ட விலங்குகளின் மீட்பு, சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
ஜாம்நகரில் 3,000 ஏக்கர் பரப்பளவில் காடு போன்ற சூழலில், மீட்கப்படும் விலங்குகள் பாதுகாப்பு, சிகிச்சை ஆகியவற்றிக்காக அதிநவீன தரத்துடன் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்ட யானைகள், ஆயிரக்கணக்கான பிற விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகளை பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வந்தாராவில் உள்ள யானைகளுக்கான மையம் 3,000 ஏக்கர் வளாகத்தில் அதிநவீன இடங்கள், ஹைட்ரோதெரபி குளங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த மையத்தில் 25,000 சதுர அடியில் உலகிலேயே மிகப்பெரிய யானை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. யானைகளில் நலனில் அதிநவீன உபகரணங்கள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து 150க்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்களை வந்தாரா திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
வந்தாரா திட்டத்தின் மூலம் கல்வி நிலையங்களுடன் இணைந்து விலங்குகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படத்தப்படவுள்ளது.